Search this blog

Popular Posts

free counters

Followers

Loading...

கேள்வி பதில் 01 - மேன்முறையீடு

விவாகரத்து வழக்கொன்றில் காழி நீதிமன்றத்தில் நீதியான தீர்ப்புக் கிடைக்காத பட்சத்தில் தமக்கான  நீதியைப் பெற்றுக் கொள்ள சட்டத்தில் வேறு வழிகள் ஏதும் உண்டா எனத் தெளிவு படுத்தவும்...?
அ.வ.க.சஸ்னா, அக்கரைப்பற்று.


முஸ்லிம்களின் விவாகரத்து முறமையானது அத்தகைய விவாகரத்தினை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தினை மேற்கொண்ட நபரினை பொறுத்து மாறுபடுகினது. அதாவது இஸ்லாமிய சட்டத்தில் விவாகரத்தினை பெற்றுக்கொள்ளவென கணவனுக்கும் மனைவிக்கும் வேறுபட்ட நடைமுறைகள் காணப்படுகின்றன. ஆண் ஒருவரினால் விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கும் முறையானது தலாக் எனவும் ஒரு பெண்ணினால் விவாகரத்துக்கென விண்ணப்பிக்கின்ற வழக்கானது பஷகு வழக்கு எனவும் அழைக்கப்படுதுடன் அதற்கான நடைமுறையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்படதாக காணப்படுகின்றன. குறிப்பாக காதியினால் வழக்கொன்றினை விசாரித்து அளிக்கப்படுகின்ற தீர்ப்பானது குறித்த விடயம் தொடர்பாக சட்டத்தினால் விதிக்கப்பட்ட நடைமுறைகளை ஒழுங்காக பின்பற்றியிருத்தல் அவசியாமாகும். குhதி ஒருவர் அத்தகைய சட்டத்தினால் குறிப்பிடப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாது தீர்ப்பளிக்க முடியாது. ஆவ்வாறு அளிக்கப்பட்ட தீர்ப்பானது சட்டத்தினால் கூறப்பட்ட நடைமுறையினை பின்பற்றாது காணப்படுகின்ற போது, அல்லது அக்குறித்த தீர்ப்பில் குறித்த வழக்காளில் எவருக்கும் திருப்பதி இல்லா போதும் மேன்முறையீட்டு நடவடிக்கைக்கு செல்ல முடியும்.   

இங்கு சகோதரியினால் கேட்கப்பட்டுள்ள வினாவானது பொதுவாக விவாகரத்து வழக்கு பற்றி குறிப்பிடுகின்றது. ஆனால் அத்தகைய விவாகரத்து வழக்கு எந்த நபரினால் அதாவது ஆண் ஒருவரினால் அல்லது பெண் ஒருவரினாலா மேற்கொள்ளப்பட்டது என தெளிவாக குறிப்பிடா படியினால் இவ்விரண்டு விவாகரத்து முறையினைப் பற்றியும் சற்று ஆராய்வோம்.  காதி ஒருவர் முன்னிலையில் விவாகரத்து வழக்கு ஒன்று வருகின்றபோது காதி பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  
விவாகரத்து வழக்கானது கணவனனால் விண்ணப்பிக்கப்பட்டது எனில் பின்வரம் நடைமுறை பின்பற்றப்படுதல் வேண்டும்.

கணவன் தன் மனைவி மீது (தலாக்) விவாகரத்தினை மேற்கொள்ள விரும்புவாராயின் பின்வரும் விடயங்களை பின்பற்றியிருத்தல் வேண்டும்.

-    முதலாவதாக, கணவன் குறித்த தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக  அவருடைய எண்ணத்தினை தன் மனைவி வதிகின்ற இடத்திற்கு பொறுப்பான காதிக்கு அறிவித்தல் வேண்டும்.
-    இதன்போது, இருதரப்பினரதும் உறவினர்கள், வயதில் மூத்தவர்கள், செல்வாக்குள்ள முஸ்லிம் நபர்கள் முதலியோரின் உதவியுடன் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்த முயற்சிப்பது காதியின் கடமையாகும்.

-    கணவன் காதிக்கு அறிவித்தல் கொடுத்த நாள் தொடக்கம் 30 நாட்களுக்குள் அவ்விருவருக்குமிடையில் சமரசத்தினை ஏற்படுத்த முடியாத வேளை, கணவன் இரு சாட்சிகளுடன் காதியின் முன்பதாக 'தலாக்கை' எடுத்துக் கூறுதல் வேண்டும்.

-    இதன் போது மனைவி சமூகம் கொடுத்திருக்கவில்லை எனில் காதி அவ்வாறு குறித்த கணவன் தலாக் மொழிந்த செய்தியினை தாமதமின்றி மனைவிக்கு அறிவிக்க வேண்டும்.

-    அவ்வாறு கணவன் தலாக்கிiனை மொழிந்த நாள் தொடங்கி 30 நாட்களின் பின் காதியால் குறிப்பிடப்பட்ட தேதி ஒன்றில் கணவன் மனைவி இருவரும் நேர்முகமாக காதியை சந்தித்தல் வேண்டும். இதற்கான எற்பாட்டினை அல்லது அறிவித்தலினை இருவருக்கும் அனுப்புவது காதியின் கடமையாகும். இதன்போது, காதி பின்பும் ஒரு தடவவை சமரசத்தினை ஏற்படுத்த முயலுவார்.

-    இதன்போது, சமரச முயற்சி தோல்வியுறுமாயின், அந்நாளில் இருந்து 30 நாட்களை அடுத்து வருகின்ற ஒரு நாளில் இருவரையும் மீண்டும் தன் முன் தோன்றும் படியாக காதி அவர்களை பணிப்பதுடன் அத்தேதியில் மீண்டும் சமரச முயற்சி ஒன்றினை மேற்கொள்ள வேண்டும்.

-    இவ்வாறான வேளைகளில் கணவன் மனைவியருக்கிடையில் எவ்வித சமரசத்தினையும் ஏற்படுத்த முடியாது போனால் காதி இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முடியாததையும் எழுதி விவகாரத்தை பதிவு செய்தல் வேண்டும். 

காதி ஒருவர் தலாக் விவாகரத்தினை பதிவு செய்கையில் கணவன் விவாகரத்து பெறுகின்ற காரணத்தினை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இச்சந்தர்ப்பம் தவிர்ந்த வழக்கின் எனைய அனைத்து நடவடிக்கைகளம் காதியின் பதிவேட்டில் எழுத்தில் காணப்படுதல் வேண்டும்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் எவ்வித சமரசத்தினையும் ஏற்படுத்த காதியினால் முடியாத போது மனைவி மஹரைக் கோரினாலும், கோராமல் விடினும் அவளுக்கு கணவன் கொடுக்க வேண்டிய மகரை காதி அறவிட்டு கொடுத்தல் வேண்டும் என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கூறப்பட்ட நடைமுறைகளில் காணப்படுகின்ற அம்சங்கள் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சமரசத்தினை மேற்கொள்ள அதிகம் ஏதுவான நிலையினை விளக்குகின்றன. எனவே விவாகரத்து ஒன்று நியாயமான வகையில் இடம்பெற்றிருக்க காதி அச்சமரச நடவடிக்கைகளை அவசியம் பின்பற்றியிருக்க வேண்டும். ஆவ்வாறான சமரச முயற்றிகள் மேற்கொள்ளப்படாது குறிப்பிட்ட விவாகரத்து பதிவுசெய்யப்பட்டிருந்தால் அது அத்தீர்ப்பு சட்டத்திற்கு மாற்றமானது. மேன் முறையீட்டின் போது காதி சபையானது குறித்த காதி சமரசத்திற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ள தவறியிருக்கின்றார் என விசாரணையின் போது அறிந்து கொண்டால் அவ்வழக்கினை மீண்டும் சரியான முறையில் விசாரிக்கவென அக்காதி நீதிமன்றிற்கு அனுப்பும்.

மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பிக்கின்ற போது பின்வருகின்ற நடைமுறை  காதியினால் பின்பற்றப்பட்டிருத்தல் வேண்டும்.

மனைவியினால் மேற்கொள்ளப்படும் விவாகரத்திற்கு பஷஹ் என குறிப்பிடுகிறது. மனைவி அனுமதியளிக்கப்பட்ட எவ்வகையான விவாகரத்iதையும் கணவனிடம் இருந்து பெறவிரும்பினால், விண்ணப்பத்திற்கு இணங்கிய வகையில் பின்வருகின்ற நடைமுறைகள் பின்பற்றப்படுதல் வேண்டும்.

-    முதலாவதாக மனைவியினால் மேற்கொள்ப்படுகின்ற விண்ணப்பமானது விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக அமைதல் அவசியம்.

1. அவ்வாறான விண்ணப்பம் ஒன்று காதிக்கு கிடைத்தவுடன் அவர் அதில் குறிப்பிடப்படட்டுள்ள விடயங்களையும் அதனை தான் விசாரணை செய்ய தீர்மானித்துள்ள திகதியினையும் கணவனுக்கு அறிவித்தல் வேண்டும்.

2. இதன் பின்னர், இப்பிணக்கினை விசாரிக்கவென காதி தமக்குதவியாக மூன்று நல்ல படித்த, குணமுடைய நபர்களை தேர்வு செய்து கொள்ளல் வேண்டும்.
3. விசாரணை தொடங்க முன்பாக, காதியானவர் கணவன் மனைவி இருவரையும் சிநேகபூர்வமான தீர்மானம் ஒன்றிற்கு அழைத்துச் செல்ல முயற்ச்சிக்க வேண்டும். அத்துடன், இருவவரினதும் சம்மதத்துடன் அல்லது ஒத்துளைப்புடன் அவர்களுக்கிடையில் காணப்படுகின்ற பிணக்கினையும், அதன் காரணிகளை நீக்கிவிடவும், அல்லது குறைத்துவிடவும் இயன்றவரை முயற்சிக்க வேண்டும்.

4. கணவன் மனைவி இருவரும் சமரசம் ஒன்றிற்கு செல்ல மறுப்பவர்களாயின், காதி இருவர் புறத்திலிருந்துமான சான்றுகளை விசாரித்து அறிதல் வேண்டும்.
5. மனைவியின் சார்பாக வெளிப்படுத்தப்படுகின்ற சான்றுகள் இரண்டிற்கு குறையாத சாட்சியங்களினால் உறுதி செய்யப்படுதல் வேண்டும்.

சட்டத்தின் ஏற்பாடுகளுக்க அமைவாக காதி தமக்கு உதவவென நியமித்துக் கொள்கின்ற நபர்கள் மூவரை உள்ளடக்கிய குழுவானது பஷஹ் வழக்கிற்கென பிரத்தியேகமானது. இந் நபர்கள் சான்றுகளின் அடிப்படையில் தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள காதிக்கு உதவுபவர்களாக காணப்படுவர். இத்தகைய நபர்களை நியமிக்க தவறுவதும், நியமிக்கப்பட்ட நபர்கள் சட்டம் தேவைப்படுத்துகின்றவாறு உறுதிமொழி அளிக்க தவறுவதும் சட்டம் ஏற்பாடு செய்த நடைமுறைகளில் பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.

பொதுவாக காதிமார்கள் இவ்விடயத்தினை பின்பற்றுவதில் அதிக சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். எனினும் சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அவை மன்னப்பாக அமையாது. இதுவரை நாம் காதியினால் வழங்கப்படுகின்ற விவாகரத்து தீர்ப்பானது நியாமானதாக அமைய எத்தகைய நடைமுறைகளை பின்பற்றியிருத்தல் வேண்டும் என அவதானித்தோம். தற்போது அத்தகைய காதியின் தீர்ப்பில் திருப்பதியற்ற ஒருவர் எவ்வாறு மேன் முறையீட்டினை மேற்கொள்வது என ஆராயவோம்.

மேன்முறையீடு பொதுவாக விவாவகரத்து வழக்கு மட்டுமன்றி, காதி ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கும் கடமைகளுக்கும் இணங்க, அவரால் அளித்த கட்டளையோடு திருப்பதிப்படாத நபர் எவரும் காதி சபைக்கு (டீழயசன ழக ஞரயணi) தமது முறையீட்டினை அளிக்க முடியும். முறையீடு பற்றிய வதிமுறைகள் பின்வருவன:

மேன்முறையீடு ஒன்று பின்வரும் அம்சங்களை பினபற்றியிருத்தல் வேண்டும்:
•    எழுத்து மூலம் விண்ணப்பதாரரின் ஒப்பத்துடன்,
 குறிப்பிட்ட கால வரையறையினுள் (30 நாட்களுக்குள்) மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

காதி நீதிமன்றிற்கு எதிரான விவாகரத்து வழக்குகள் பற்றிய முறையீடுகள் யாவும் அத்தகைய கட்டளை காதி நீதிமன்றில் ஆக்கப்பட்டு 30 நாட்களுக்குள் முறையீடு மேற்கொள்ளப்படல் வேண்டும். எவ்வாறெனிலும், குறித்த கால வரையறைக்குள் மேற்கொள்ளப்பட்டிராத முறையீடுகளையும் நியாயமான காரணங்களின் அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அதிகாரம் காதி சபைக்கு உண்டு.

விண்ணப்பதாரி தான் மேன்முறையீடு மேற்கொள்ள இருப்பதனை காதிக்கு அறிவிப்பது அவசியமாகும். அவ்வாறு காதிக்கு அறிவித்தல் கொடுக்க தவறுவது காதி தனது நீதிமன்ற நடவடிக்கையினை மேற்கொள்வதில் தடங்கல்களை உண்டுபண்ணலாம்.

தற்போது காதி சபையானது நாடு முழுவதுமாக சுமார் 60 ற்கும் மேற்பட்ட காதி நீதிமன்றங்களிலும் இருந்தும் வருகின்ற முறையீடுகளை விசாரணை செய்து வருகின்றது. இந்தகைய விசாரணைக்காக காதி சபையானது கொழும்பு மற்றும் கல்முனை ஆகிய நகரங்களில் தமது அமர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் எழுகின்ற குடும்ப பிரச்சினைகள், அவர்களினால் எதிர்நோக்கப்படுகின்ற சவால்கள் மற்றும் அவர்கள் முறையீடு தொடர்பாக எதிர்நோக்குகின்ற சிரமங்கள் முதலியவற்றை கருத்திற்கொண்டு காதி சபையானது 2009ம் ஆண்டிலிருந்து தமது அமர்வுகளை கல்முனை நகரத்தில காணப்படுகின்ற நீதிமன்ற கட்டிடத் தொகுதியிலும் மேற்கொண்டு வருகின்றது.

ஒருவர் காதி சபையின் (Board of Quazi) தீர்மானம் தொடர்பிலும் திருப்தியுறாத போது முதலாவதாக மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு (Court of Appeal) முறையிடலாம். மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பிலும் திருப்தியுறாத போது நாட்டின் உச்ச நீதிமன்றிற்கும் (Supreme Court) செல்ல முடியும். காதி சபையிலிருந்து மேலும் முறையீடு செய்யப்படுகின்ற முறையீடு எதுவும் காதி சபையினால் அத்தீர்மானம் வெளியிடப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்களுக்குள்ளாக மேன்முறையீட்டிற்காக எடுத்துச் செல்லப்படுதல் வேண்டும்.

விவாகரத்து வழக்கொன்றில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் என அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காணரமாக பல்வேறு பெண்கள் அமைப்புக்களும், தொண்டு நிறுவனங்களும் தற்போது பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு தமது சேவைகளை இலவசமாக வழங்கி வருகின்றன. எனவே தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கருதுகின்ற பெண்கள் பின்வருகின்ற நிறுவனங்களை தொடர்பு கொண்டு அல்லது அணுகி தமக்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் சட்டத்தரணிகளின் உதவிகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

MUSLIM WOMEN'S RESEARCH AND ACTION FORUM.
21/25, Polhengoda Gardens, Colombo 05.
011-2512846

NORWEGIAN REFUGEE COUNCIL,
Information and Counseling Legal Assistance (ICLA)
51, Yard Road, Kalmunai 01.
 
மேலதிகமாக, நீதிமன்ற வளாகங்களில் காணப்படுகின்ற சட்ட உதவி ஆணைக் குழுவின் உதவியினையும் இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்கள் பெற்றுக் கொள்ள முடியும். சட்ட உதவி ஆணைக் குழுவானது இலவசமாக சட்ட உதவிகளையும், ஆலோசனைகளையும் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு வழங்கும் பொருட்டு அரசினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகம். இதன் கிளைகள் நாட்டில் காணப்படுகின்ற ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் அமைந்து காணப்படுகின்றது.





0 comments: