மலேசியாவில் பலாதார மணத்தினை அதிகமாக பின்பற்றும் நிலமை அதிகரித்து வருவதாக கணிப்புக்கள் கூறுகின்றன. இதனை மலேசிய மக்கள் இஸ்லாமிய மயமாதலின் ஒரு இன்றியமையாத பண்பொன்றாக உற்று நோக்குகின்றனர். இவ்வாறானதொரு குடும்பம்தான் றுகையாவினது குடும்பம். இக்குடும்பத்தில் ஏழு வயதிற்கும் இருபத்தொரு வயதிற்கும் இடைப்பட்ட 17 குழந்தைகள் உள்ளனர்.
பல்வகைமையை பிரதிபலிக்கின்ற மலேசிய முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்களது கருத்து யாதெனில் இவ்வாறான திருமண நடைமுறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் முதலியவற்றினை பாதிப்பதாயமைகின்றது என்பதாக காணப்படுகின்றது.
ஆனாலும் றுகையாவும் அவருடன் சேர்ந்த ஏனைய மனைவியர்களும் தங்களுடைய வீட்டு வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் குழந்தைகளை பராமரிப்பதிலும் அவர்களுக்கான தேவைகளை சரிவர மேற்கொள்வதிலும் மிகவும் ஆர்வம் செலுத்துகின்றனர்.
எதுவித சஞ்சலமுமற்ற இவர்களுடைய குடும்பத் தலைவர்தான் 43 வயதுடைய முகம்மட் இக்ராம் அசாரி. இவர் தம்முடைய மனைவியர்களுக்கு வேறு வேறு வதிவிடங்கைள தாயார் செய்து கொடுத்துள்ளதுடன் தனது நாட்களின் ஒவ்வொரு இரவுப்பொழுதினையம் சுழற்சி முறையில் ஒவ்வொரு மனைவியருக்கு திருப்திப்படும் அளவில் செலவு செய்கின்றார். வார இறதி நாட்களில் குடும்பத்தினர் யாவரும் ஒன்றாக சேர்ந்து தமது மகிழ்ச்சியனை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
இங்கு காணப்படுகின்ற பலதார மணத்தினை வலியுறுத்தும் இஹ்வான்கள் அமைப்பானது அதிகமானவர்களது விமர்சனத்திற்கு உட்பட்டது. இவ்வமைப்பானது மக்கள் மத்தியில் பலதார மணம் பற்றிய நம்பிக்கையினை வளர்த்தெடுப்பதனை அதிகம் நம்புகின்ற அதே வேளை, விபச்சாரம் மற்றும் ஏனைய துட்பிரயோகங்களிலிருந்து மக்களை குறிப்பாக குடும்பத்தவர்களை காப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இதனை வலியுறத்துகின்றது.
'சாதாரணமாக மனிதன் பல்வேறு இச்சைகளுக்கும் ஆட்பட்டவன். இதனால் அவன் பல்வேறு பெண்களுடன் தொடர்புகளை எற்படுத்திக்கொள்ள ஆர்வம் கொண்டவனாகவும், விபச்சாரத்திற்கு வழியமைப்பவனாகவும் மாறிவிடுகின்றான். இதனால் மனிதன் விபச்சாரத்தில் ஈடுபடுகின்ற நிலமை ஏற்படுகின்றது” என றுகையா குறிப்பிடுகின்றார். இவ்வாறுதான் இறைவன் மனிதனை படைத்துள்ளான். எனிலும், இஸ்லாம் இதற்கும் அப்பால் சென்று பெண்களுடன் ஏற்படுத்திக்கொள்கின்ற தொடர்புகள் குறித்து பொறப்புடையவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது.
இவ்வாமைப்பானது அல்- அர்க்காம் எனும் பிரிவினரைச் சார்ந்தது என்பதனால் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கி வருகின்றது. மலேசிய அரசாங்கம் இதனை சட்டரீதியற்ற இஸ்லாமிய அமைப்பாக கருதியுள்ளது அவதானிக்கத்தக்கதாகும். இதன் கிளை நிறுவனங்கள் தற்போது விரிபடுத்தப்பட்டு வருகின்றமை ஏனைய மக்கள் மத்தியில் பெரிதும் கவனத்திற்குரிளதாக மாறியுள்ளது. இந்தோனேசியாவில் தற்போது இதன் கிளை நிறுவனங்கள் தமது கருத்துக்களை பலமான முறையில் வெளிப்படுத்தி வருகின்ற அதே சமயம், தென் ஆசியா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுமார் 1000 அங்கத்தவர்கள் தெடர்புகளை இவ்வமைப்புடன் பேணிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
முகம்மட் இக்ராம் இவ்வமைப்பின் சர்வதேச பணிப்பளராவார். இவ்வமைப்பினை நிருவகிப்பதற்கான வருமானத்தினை ஈட்டித்ரும் வண்ணமாக விடுதிகள் மற்றும் நுடில்ஸ் உற்பத்தி கம்பணிகளும் இவ்வமைப்பின் அங்கத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன.
றுகையாவின் கருத்தில் 'இறைவனுடைய விதிமுறைகளை நாம் சரியாக பேணுவோமானால் பலதார மணம் வெற்றிகரமாக அமையும். இதனை பின்பற்றும் படியாக மக்களை நாம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் நாம் அவர்களினுடைய மனங்களை வெல்ல முயற்சிக்க வேண்டும்.”
மலேசியவின் சமூவியலாளர் நூறானி உத்மான் இந்நடவடிக்கை பற்றி குறிப்பிடுகையில், 'பெரும்பாலான கற்ற பெண்களும், பிள்ளைகளும் இதற்கு துணைபோவது கிடையாது. இங்கு பலதார மணத்தின் இன்றிமையாத நோக்கம் முறையாக புரிந்துகொள்ளப்படவில்லை என்பதுடன் பெண்கள் நியாயமாகவம், நீதியாகவும், சமமாகவும் நடாத்தப்படல் வேண்டும் என்கின்ற இஸ்லாத்தின் பலமான விதி தாறுமாறாக முடுக்கிவிடப்பட்டுள்ளது” என கருதுகின்றார்.
தற்கால நிலமையில் ஒருவர் தமது மனைவியரையும் குழந்தைகளையும் போதுமான வகையில் பராமரிப்பது மிகவும் சுலபமானதல்ல. குறிப்பாக மலேசியாவில் இந்நடைமுறை மிகவும் சிக்கல்வாய்ந்தது என அவர் குறிப்பிடுகின்றார். மேலும், இங்கு புதிய திருமணத்திற்கு தமது சம்மதத்தினை வழங்காத அல்லது மறுப்பு தெரிவிக்கும் மனைவியர்கள் உணர்வுபூர்வமாகவும், நிதி வசதிகள் வாயிலாகவும் பெரிதும் கொடுமைப்படுத்தப்படுவதுடன் அதிகமான அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.
தற்காலத்தில், மலேசியாவில் இடம்பெறுகின்ற திருமணங்களில் 5 சதவீதமானவை பலதார மணமாகவே காணப்படுகின்றன. இக்கணிப்பானது பலதார மணத்தினை தடுக்கவல்ல விதிகளின் தேவையினை சுட்டிக்காட்டுவதாயமைந்துள்ளன என வாதம் புரிவோரும் உண்டு. இவை தொடர்பில் கடந்த 15 வருடங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனையின் சாயலாக அதனை படம்பிடித்துக் காட்டியுள்ளது எனலாம்.
இவ்வாறான மேலெழுந்த வாரியான இஸ்லாமிய பின்பற்றுதல்களின் விளைவாகவும், அதன் தாக்கத்தினாலும் சாதாரண முஸ்லிம்கள் அதன் தாட்பரியங்களையும், கடுமையான போக்கினையும் கருத்திற்கொள்ளாது பலதார மணத்தினை அமுல்நடாத்த எத்தணிக்கின்றனர்.
எவ்வாறாயினும், முகம்மட் இக்ராம் மற்றும் அவரினுடைய குடும்பமும் அல்- குர்ஆனின் விதிகளின் அடிப்படையில் அதனை மேற்கொள்வதில் பலன் உண்டு என நம்புகின்றனர். அவர் கூறகையில் 'நான் ஒரு வகையில் அதிட்டம் நிறைந்தவன். காரணம் எனக்கு நான்கு மனைவியர்கள் உள்ளனர். அது என்னை பாவங்களிலும் இன்ன பிற தீய உணர்வுகளிலிருந்தும் தடுக்கின்றது. இவை ஏற்கனவே போதுமான அளவு இருப்பினும், ஒருவர் திருப்பதியடையவில்லை எனில் அங்கு மேலும் அதிகமாக பெறவேண்டும் என்கின்ற ஆவல் மிகைத்துவிடுகின்றது” என தெரிவிக்கின்றார்.
பொதுவாக பலதார மணம் (polygamy) என்பது நபரொருவர் ஒன்றிற்கு மேற்பட்ட துணையினை வைத்திருப்பதனை குறிக்கின்றது. இதனை நாம் இரு வகையாக அவதானிக்க முடியும். முதலாவதாக, ஆண் ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவியரை கொண்டிருப்பது (Polygene). இரண்டாவது, பெண் ஒன்றிற்கு மேற்பட்ட கணவான்களை கொண்டிருப்பது (Polyandry).
உலகில் காணப்படுகின்ற சமய நூல்களில் அல்- குர்ஆன் மாத்திரமே ஒருத்தியை மட்டும் மணம் முடிக்க ஏவுகின்றது. ஏனைய நூல்களில் அவ்வாறு கூறப்படவில்லை. கிறித்துவத்தில் கூட பைபிளில் துணைவியரின் எண்ணிக்கை தொடர்பில் மட்டுப்பாட்டினை குறிப்பிடும் வரை பல துணைவியரை வைத்திருப்பதற்கு அனுமதியிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வாறான மட்டுப்பாடுகள் ஆலயங்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆல்குர்ஆன் மாத்திரமே ஒருதாரத்தினை வலியறுத்தி நிற்கின்றது.
'அநாதை(ப் பெண்)கள் விசயத்தில் நீதம் செய்துகொள்ள முடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்ற) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்துகொள்ளுங்கள் அவர்களுக்கிடையில் நீதமாக நடக்கமுடியாதெனப் பயந்தால் ஒரு பெண்ணை அல்லது உங்கள் வலக்கரம் போதுமாக்கி கொண்டதை போதுமாக்கி கொள்ளுங்கள். நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமான வழியாகும்.” [சூறா அன்நிசா.03]
அன்றய அராபிய காலத்தில் ஒருவர் பல்வேறு மனைவியரை வைத்திருந்தனர். சிலர் நூற்றுக்கும் அதிகமான மனைவிரை வைத்திருந்ததாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இஸ்லாம் இந்நிலமையினை முடிவுக்கு கொண்டுவர மட்டுப்பாட்டினை மேற்கொண்டதுடன் ஒருவர் நான்கைவிட அதிகம் மனைவியரை வைத்திருப்பதனை தடைசெய்தது. எவராவது ஒன்றிற்கு மேற்ப்பட்ட மனைவியரை வைத்திருக்க ஆசை கொள்வாராகயிருந்தால் ஒரே ஒரு நிபந்தனைதான் 'அவர்களுக்கடையில் சமாமான நீதியை நிலைநாட்டல் வேண்டும்” என்பதாகும். ஆனாலும் அவ்வாறு மனைவியருக்கிடையில் நீதியாக நடந்து கொள்வதென்பது சுலபமானதல்ல என அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது.
'இன்னும், நீங்கள் மனைவியருக்கிடையில் எவ்வளவு விரும்பிய போதிலும் நீங்கள் நீதமாக நடக்க நீங்கள் சக்தி பெறவே மாட்டீர்கள். ஆனால், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (மற்ற) அவளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவளைப் போல் விட்டுவிடாதீர்கள். இன்னும் நீங்கள் சமாதானமாக நடந்துகொண்டு (அல்லாஹ்வையும்) பயந்து கொண்டால் அப்போது நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்களை) மிக மன்னிப்பவனாக, மிக கிருபையுடையவனாக இருக்கின்றான்.” [சூறா அந்நிசா .129]
எனவே, பலதார மணமானது இஸ்லாத்தில் ஒரு விதிவிலக்கான விடயமே அன்றி ஒரு விதியாக கருதப்படமுடியாது. இஸ்லாம் இதனை கட்டாயமாக அங்கீகரித்துள்ளதாக பெரும்பாலனவர்கள் கருதிக்கொள்கின்றனர். எனிலும் இக்கருத்து மிகவும் தவறான ஒரு நிலைப்பாடாகும். இஸ்லாத்தில் ஐந்து வகையான செயன்முறைகள் கருத்திற்கொள்ளப்படுகின்றன.
கடமையான செயல்
ஆர்வமூட்டப்படவை
அனுமதிக்கப்பட்டவை
தவிர்ந்து கொள்ளுமாறு ஏவப்பட்டவை
தடுக்கப்படவை
இப்பலதார மணமானது அனுமதிக்கப்பட்ட வகையினை சார்ந்தது. எவர் ஒன்றிற்கு மேற்பட்ட மனைவியரை சொந்தமாக வைத்திருக்கின்றாரோ அவர் ஏனையவர்களைவிட சிறந்தவர் என கருதும் வகையில் எந்தவொரு அல் குர்ஆன் அல்லது ஹதீஸ் ஆதராங்களையும் நாம் காணமுடியாது.
0 comments:
Post a Comment