Search this blog

Popular Posts

free counters

Followers

Loading...

விவாகரத்தினை வரவேற்கும் இலங்கை முஸ்லிம்கள்


ஒழுக்க முறையான வாழ்க்கைக்கும், கட்டுப்பாடான வாழ்க்கை முறைமைக்குள்ளும் வாழ்ந்து பழகிவிட்ட சில பெண்கள் திருமணம் நிகழ்ந்துவிட்டாலோ சகஜமான உலகிற்குள் நுழைந்துவிட்டதாக கருதிக்கொள்கின்றனர். சாதாரணமாக, தற்கால இளம் சந்ததியினர் குறிப்பாக இளைஞர்கள் தமக்கு வாய்க்கின்ற பெண்மகள் மிகவும் நாகரீகமானவளாய் அமைந்திருக்க வேண்டுமென ஆசை கொள்கின்றான். இதனால் அவர்கள் தம் மனைவியர்கள் சமூகத்தில் சாதாரணமாக புழங்குவதனையும் ஏனைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதனையும் அலட்டிக்கொள்வது கிடையாது.
இஸ்லாமும் அதன் உபதேசங்களும் விவாகரத்தினை அனுமதித்திருக்கவில்லை. எனிலும் விதிக்கான ஒரு விலக்காக அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. ...(நீங்கள் விவாகரத்து செய்த) பெண்களை அவர்கள் இருக்கும் (உங்களுடைய) வீடுகளிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவடைவதற்கு; முன்பாக) நீங்கள் வெளியேற்றிவிடவும் வேண்டாம், அவர்களும் வெளியேற வேண்டாம். பகிரங்கமான மானக்கேடான காரியத்தை அவர்கள் கொண்டுவந்தாலன்றி, இன்றும் இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்.... (சுறா 65).
நபி அவர்கள் கூறினார்கள் இஸ்லாத்தினில் அனுமதிக்கப்பட்டுள்ள விடயங்கள் யாவற்றிலும் இறைவனால் மிகவும் வெறுக்கத்தக்க செயல் விவாகரத்தாகும்'.( அபூ தாவுத் சுனன் XIII 3) ஆணாயினும் அல்லது பெண்ணாயினும் குடும்ப வாழ்வில் சுகத்தினை அனுபவிக்க இயலாத போது அல்லது நம்பிக்கையிழக்கின்ற போது மாத்திரமே விவாகரத்தினை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது. இது இஸ்லாம் எமக்கு கற்றுத்தருகின்ற தெளிவான விளக்கமாகும்.
நிதர்சனத்தில், நாகரீகங்களுக்கு இசைவான முஸ்லிம் சமுதாயத்தில் பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து அனுமதிக்கப்படுவதாகவும், மிகவும் இலாவகமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாயும் மாறிக்கிடக்கின்றது. சமுதாயம் அதனை ஒரு மானியமாகவும், அதேவேளை அதிருப்தியுற்ற திருமணத்தின் இறுதி விளைவாகவும் மாற்றியமைத்திருக்கின்றது. இஸ்லாத்தின் நோக்கில் விவாகரத்து என்பது இறுதியில் (அறுதித்தீர்வல்ல) எய்தப்படும் ஒரு தீர்வாக அமைதல் வேண்டுமென்பது பற்றி எமது சமுதாயம் மிகவும் அரிதாகவே அல்லது ஒரு போதும் அறிந்துவைத்திருக்கவில்லை எனத்தான் கூறவேண்டியிருக்கின்றது.
அதிருப்தியுற்ற உறவுகளுக்கிடையில் இணக்கப்பாட்டினை மேற்கொள்ள முஸ்லிம் சட்டமானது ஏற்பாடுகளை கொண்டுள்ளது. காழிமார்களும் இவ்வாறான தம்பதிகள் மத்தியில் மீள நல்லிணக்கத்தினையும், சக வாழ்வினையும் கொண்டுவர போதுமான தத்துவங்களை கொண்டிருக்கின்றனர். இவ்வாறான எல்லா வகையான வழிமுறைகளும் செயலிழக்கும் அல்லது பயனளிக்காத தருணத்தில்தான் தம்பதியினர் சட்டவாறான விவாகரத்தினை பெற்றுக்கொள்கின்றார்களா? வருத்தத்திற்குரிய சம்பவம் யாதெனில், முஸ்லிம்கள் அற்ப சொற்ப காரணங்களுக்காகவெல்லாம் விவாகரத்திற்குள் குதித்து நீராடுகின்றனர் என்பதுதான். இவை இஸ்லாத்தின் மகோன்னதமான தத்துவங்களையும் அதன் பெறுமதியினையும் உணராததன் விளைவா என்பது கருத்தடலுக்குரியது.
அதிருப்பதியுற்ற தம்பதிகளின் பெற்றோர்களோ அல்லது ஏனைய குடும்ப பெரியவர்களோ, முதியவர்களோ அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தால் சட்டவாறாக பிரிய வேண்டிய தருணம் அவர்களுக்கு கிட்டியிராது. தற்காலத்தில் நிகழும் அதிகூடிய எண்ணிக்கையிலான விவாகரத்துக்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சாபக்கேட்டிற்குரியவர்கள் என்பதனை மறந்துவிடக்கூடாது. அல்குர்ஆனில் கூறப்படுகின்ற விடயங்களில் எது மனிதாபினத்தின்படி நியாயமானது அல்லது சரியானது என்பதற்கும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தின் பொருள் கோடலின் படி சட்டவாறாக எது சரியானது என்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. சட்டம் என்பது சமுதாயத்தின் நடத்;தைகளினால் வளர்ந்துவருகின்றதாகையால் கவனக்குறைபாடுகளை நிறையவே சுமந்திருக்கும் அத்துடன் அதன் பார்வை எப்போதும் முன்று கோணங்களைத்தான் அவதானிக்கும். நான்காவது கோணம் அதன் பார்வைக்கு மிகவும் தூரமானது. ஏனவே, ஒருவர் விவாகரத்து பற்றி ஒரு நிச்சயமானதும், தீர்க்கமானதுமான அறிவினை பெற்றுக்கொள்ள முயற்சிப்பாராயின், அதனை மிகவும் விதிவிலக்கான சந்தாப்பங்களிலன்றி மிகவும் கடுமையாக தடைசெய்கின்ற அல் குர்ஆனைத் தவிர நாடுதற்கு வேறு வழியில்லை.
அவ்வாறாயின், முஸ்லிம்கள் மத்தியில் விவாகரத்தானது மிகவும் பரவலாக காணப்படுவதற்கு காரணங்கள்தான் என்ன? அடிப்படையில், அதிகமான திருமணங்கள் குலைவதற்கு காரணமாக அமைவது சமுதாயத்தில் ஏற்படுத்தப்படுகின்ற கற்பனையான அல்லது வியூகம் சார்ந்த பல்வேறு நியாயங்களும், சமநிலையற்ற அந்தட்துக்களும் என்றால் அது மிகையல்ல.
இலங்கையில் முஸ்லிம் சமூகமானது எனைய சமூகங்கள் போலல்லாது மிகவும் எதிரிடையானதும், அதிக விரிசலுடையதுமான சமூக நிலைசார் கட்டமைப்பினை தன்னுள் வகுத்து வைத்திருக்கின்றது. ஒருபறம் மிகவும் வறுமையானவர்களையும் மறுபுறம் செழிப்பில் திளைக்கும் சீமான்களையும் உருவாக்கியுள்ளது. கற்றறிந்தவர்களையும், கல்லாதோரையும் மறுபுறம் பாமரமக்களையும், கற்றுத்தேறாதவர்களையும் கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் மிகவும் நெருக்கமாக வாழும் அமைப்புத்தான் முஸ்லிம் சமூகம் எனலாம். இதேவேளை, உறவறுத்தலில் ஆர்வம் காட்டும் துணைகளின் பெற்றோர்களை அவதானிக்கும் வேளை அவர்கள் இவை தொடர்பில் அதிகம் கவனயீனமுடையவர்களாக காணப்படுகின்றனர். அதிகமான சந்தர்ப்பங்களில் அவர்களே பிள்ளகைளுடைய வாழ்வினை துண்டாடும் நிகழ்ச்சி நிரல்களையும் ஒழுங்கமைப்பவர்களாக இருந்து விடுகின்றனர்.
நன்றாக கற்ற பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைக்கு மிகவும் செழிப்பான ஒரு கணவனை தேர்ந்தெடுப்பதில் ஆர்வமுடையவர்களாயிருக்கும் அதே தருணத்தில், நல்ல செல்வச் செழிப்பில் குதிக்கும் குடும்பப் பெற்றோர்கள் தமது பெண் பிள்ளளைக்கு கற்றுத் தேர்ந்த கணவன் ஒருத்தனை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவாக் கொண்டுள்ளனர். இதனால் சமூகத்தின் உச்ச நிலையில் இருப்பவர்கள் மத்தியில் இடம்பெறும் உறவறுத்தல் செயன்முறைக்கு சமூக கட்டமைப்பில் காணப்படுகின்ற ஒரு சீரற்ற அல்லது வேறுபாடு ஒரு காரணமாகவுள்ளது.
இஸ்லாமிய போதனையின் பிரகாரம் செல்வ வளம், உடல் பலமும் கொண்டுள்ள நபரொருவர் திருமணம் மேற்கொள்வது அத்தியாவசியமாகின்றது. நபிகள் பெருமானார் அவர்கள் கூறினார்கள் எவரொருவர் திருமண பந்தத்தில் இணைய சகல வசதிகளையும் கொண்டுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவருடைய பார்வையையும், கற்பையும் காத்துக்கொள்ள போதுமானது (புகாரி 67: 01) திருமணத்தின் தாட்பரியங்களையும் அதன் பொறுப்புக்களையும் உணராத வயதில்; தம்மில் தங்கி வாழ்கின்ற பிள்ளைகளுக்கு திருமணத்தினை மேற்கொள்கின்ற பெற்றோர்கள் நபிகளாரின் இவ்வாக்கினை பிழையான வகையில் விளக்க முற்படுகின்றனர். ஈற்றில் அவர்கள் மென்மேலும் பெற்றோரில் மட்டுமன்றி மனைவியின் பெற்றோரிலும் தங்கி வாழ்பவர்களாகவும், தமக்கென சொந்தமான இருப்பிடமொன்றினை தயார் படுத்திக்கொள்ள இலாயக்கற்றவர்களாயும் மாறிவிடுகின்றனர். இயல்பாகவே, கணவன் மனைவி இருவரும் அவர்களுடை பெற்றோரில் தங்கி வாழ்கின்ற அதே அளவிற்கு அவர்களுடை குடும்ப உறவிலும் விரிசல்கள் ஏற்படுகின்றது  என்பது கண்கூடு.
முஸ்லிம்கள் மத்தியில் திருமண பந்தம் தோல்வியுறுதற்கு மற்றொரு காரணம்தான் எம்மத்தியில் தெளிவாக காணப்படுகின்ற சீதன முறைமையாகும். சீதனக் கொடுக்கல் வாங்கல் என்பது முஸ்லிம்களினுடைய பாரம்பரியமோ கலாச்சாரமோ அல்ல. மணமகன் திருமணத்தின் போது மணமகளுக்கு மஹர் தொகையினை அளிப்பது இன்றியமையாத ஒரு திருமண நிகழ்வாகும். ஆனால் இஸ்லாம் போதிக்கும் இவ்வழக்கம் இன்று மறக்கடிக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பார்வையில் சீதனம் என்பது தடுக்கப்பட்ட ஒன்றாயிருப்பினும் இன்று சமூகத்தில் அது ஒரு வழக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. மணவாளனுக்கு சீதனம் கொடுக்கின்ற வழக்கமானது நிச்சயமாக இந்து மததத்திலிருந்து ஊடறுக்கப்பட்டு வந்த ஒரு நடைமுறையாகும். இத்தகைய வழக்கத்தினால் தன்னால் தனது பெண்பிள்ளைக்கென வழங்கக் கூடியனவுக்கு அப்பாலும் பேரன்பிற்குரிய தகப்பன்மார்கள்; வாக்குறுதிகளை வாரி வழங்கிவிடுகின்றனர். இதனால் மதிப்புமிக்க மணமக்கள் தமக்கு வழங்குவதாக கருதியவைகள் தம்மை வந்தடையாத மாத்திரத்தில் மனைவியிடத்தில் இருந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இவ்வாறாக, பெரும்பாலான திருமணங்கள் தம்பதிகளின் எதுவிதமான தவறுகளோ அல்லது பிழைகளோ அல்லாமல் மலையேறுகின்ற நிலமை ஏற்படுகின்றன.
ஒழுக்க முறையான வாழ்க்கைக்கும், கட்டுப்பாடான வாழ்க்கை முறைமைக்குள்ளும் வாழ்ந்து பழகிவிட்ட சில பெண்கள் திருமணம் நிகழ்ந்துவிட்டாலோ சகஜமான உலகிற்குள் நுழைந்துவிட்டதாக கருதிக்கொள்கின்றனர். சாதாரணமாக, தற்கால இளம் சந்ததியினர் குறிப்பாக இளைஞர்கள் தமக்கு வாய்க்கின்ற பெண்மகள் மிகவும் நாகரீகமானவளாய் அமைந்திருக்க வேண்டுமென ஆசை கொள்கின்றான். இதனால், அவர்கள் தம் மனைவியர்கள் சமூகத்தில் சாதாரணமாக புழங்குவதனையும் ஏனைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதனையும் அலட்டிக்கொள்வது கிடையாது. ஆனால் துரதிட்டவசமாக பெண்கள் அதனை தவறாக பயன்படுத்திக்கொண்டு மிகையான செயற்பாடுகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வீட்டில் காலாகலமாக பின்பற்றப்படும் நடைமுறைகளுக்கு சவால் விடுக்கின்றனர். இதன் விளைவாக அவர்களுடைய வீட்டு வாழ்க்கையின் தண்டவாளம் புரண்டுவிடுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்ற நாகரீக சமூகமாக கருதிக்கொள்கின்றவர்களிடத்தில் பொதுவாக இடம்பெற்று வருகின்றன.
இன்று கடைப்பிடிக்கப்படுகின்ற புர்தா எனப்படும் ஆடைவகையானது அதிமான மணமக்கள் தமக்காக பிழையான யுவதிகளை தேர்ந்தெடுக்க காரணமாக இருந்திருக்கிறது என்பதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது. திருமணத்திற்காக மிகவும் அழகான இளைய சகோதரிகள் காட்டப்படுவதும், பின்பு திருமணத்தின் போது மூத்த சகோதரியை கட்டிவிடுகின்றனர். மிகவும் காலம் தாழ்த்தியே மணமகன் இதனை அறிந்து கொள்கின்றான். அவனுக்கு இருக்கின்ற ஒரே ஒரு மாற்று வழி விவாகரத்தினை தவிர வேறொன்றுமில்லை.
இலங்கையின் சில பகுதிகளில், புதிதாக பந்தத்தில் இணைந்துகொண்ட மணமக்கள் சில ஆண்டுகளுக்கு பெண்ணின் பெற்றோரின் வீட்டிலேயே வாழும் வழக்கமும் இல்லலாமலில்லை. இவ்வாறாக வாழ்கையில், விருந்தினர்களாக வருகின்ற உற்றார், உறவினர்களை உபசரிப்பதென்பது பெரும் சிரமங்களை உண்டாக்கி விடுகின்றனஇவ்வாறான பெற்றோரினுடைய தலையீடுகளும், நச்சரிப்புக்களும் கணவன் மனைவிக்கிடையில் அதிருப்தியை உருவாக்கி இறுதியல் நீதிமன்றிற்கு கொண்டு சேர்த்துவிடுகின்றது.
கூட்டுக்குடும்பம் நடாத்துகின்ற குடும்பங்களிலும் அவ்வப்போது பிரச்சினைகளும், சச்சரவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன. தம்பதிகளின் பெற்றோர்கள் அவர்களிடத்தில் ஏற்படுத்திக்கொள்கின்ற தேவையற்ற தலையீடுகளினால் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு முறுகல் நிலையை அடைந்துவிடுகின்றன. இதனால் வெறுத்துப்போன தம்பதிகள் தமமெக்கென ஒரு இருப்பிடத்ததை தயார் செய்து கொண்டு தமது பெற்றோர்களைவிட்டும் வேறு இடங்களுக்கு சென்று வாழ்கின்ற நிலமை ஏற்படுத்தப்பட்டுவிடுகின்றது. என்றாலும் சிரமங்கள் ஓய்ந்தபாடில்லை. இவ்வாறு சென்றவர்கள் குடும்பவாழ்க்கையில் ஏற்படுகின்ற சவால்களையும், பொறுப்புக்களையும் முறியக்கக்கூடிய வகையில், நிறைவேற்றிக்கொள்ள கூடிய வகையில் பக்குவப்பட்டவர்களாக இல்லை. இவை அவர்களுடைய தடையேதுமின்றியிருந்த தாம்பத்தியத்தில் இடைஞ்சல்களை உண்டுபண்ணிவிடுகின்றன.
பிரபல்யமாக காணப்படுகின்ற தவறான ஒரு நம்பிக்கை யாதெனில், ஒரு ஆண் நான்கு மனைவியரை வைத்திருக்க முடியும் அத்தோடு விவாகரத்து என்பது சமூக வாழ்வில் சாதாரணமானதொன்று என்பதாகும். சட்டம் அதனை அங்கீகரித்திருப்பினும் நடைமுறையில் அவ்வாறு நான்கு மனைவியரை கொண்டுள்ளவர்கள் மிகவும் அரிதாகும். அவ்வாறன திருமணம் தொடர்பில் காணப்படுகின்ற நிபந்தனைகள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை ஒரு ஆண்மகன் பெற்றுவிளங்குவதனை சாத்தியமற்ற ஒன்றாக்கிவிடுகின்றது. அவதானிப்பதற்கு விவாகரத்து முறை வேறொரு மனைவியை தேர்ந்து கொள்வதற்கான சாத்தியமான வழிவகையாக இருப்பினும், அம்முறை தவறான வழியில் அல்லது பிழையான வகையில் திருமணத்தினை முடிவுறுத்துவதனை ஒருபோதும் ஏற்காது.
இவ் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் திருமணம் தொடர்பில் தனிப்பட்டவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அணுகுமுறைகளாகும். முதலில், முஸ்லிம், சிங்களம், தமிழ், பறங்கியர் என்பவர்கள் அவர்களிடையே காணப்படுகின்ற அனைத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மனிதர்கள். உலகத்திலுள்ள யாவருக்கும் மனிதன் என்ற வகையில் காணப்படுகின்ற ஆசைகள், எண்ணத்துடிப்புக்கள் ஒரேமாதிரியானவை. எனினும், அவர்களுடைய சிந்தனைகளின் அளவு, பரிமாணம் அவர்கள் வாழ்கின்ற சமூகத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்டவையாக காணப்படலாம். இதில் முஸ்லிமும் விலக்கல்ல. ஒரு தனிநபர் திருமணம் ஒன்றின் மூலம் எவைகளை அடைந்துகொள்ள எத்தணிக்கின்றானோ அவை அவனுடைய முயற்சியினை பொறுத்ததொன்று. அவன் அதிலிருந்தும் தவறுவானாக இருந்தால் அவன்சார்ந்த சமூகத்தின் மீது பொறுப்பாகிவிடுகின்றது. ஒரு தனிமனிதனுடைய நடத்தை, ஒழுக்கம் என்பன சமூகத்தின் ஒழுக்கவியல் பாங்கை படம் பிடித்துக் காட்டுபவையாக இங்கு கருதப்படுகின்றது
ஒருதாரம் என்பது மனிதனுடைய இயல்பானதும், நடைமுறை சார்ந்ததுமான அம்சம். அவனுடைய இந்நிபந்தனைகளுக்கமைவாகவே சமூகம் காணப்படும். - ஏர்ள் றஸ்ஸல்
திருமணம் சுவர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றதாக இருப்பினும், அவர்களுடைய வாழ்வும் இவ்வுலகில் நரகவாழ்வை நடாத்தும் சமூகத்துடன்தான் வாழ்ந்து தீர்க்கவேண்டியிருக்கின்றது என்பதனை நாம் மறந்துவிடமுடியாது.   

1 comments:

Issadeen Rilwan said...

அன்பின் நண்பருக்கு, எமது சமூகத்திற்கு தேவையான ஒரு பகுதி, தொடர்ந்தும் எழுதுங்கள்.